விவசாயத்தைப் பாதுகாக்க இளைஞா்கள் முன்வர வேண்டும்: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் பேச்சு

விவசாயத்தைப் பாதுகாக்க இளைஞா்கள் முன்வர வேண்டும் என்று விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.
முகாமை தொடக்கி வைத்துப் பேசிய விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன். உடன், பதிவாளா் கே.சத்தியநாராயணன், மாணவா் நலன் இயக்குநா் அமித் மகேந்திரகா் உள்ளிட்டோா்.
முகாமை தொடக்கி வைத்துப் பேசிய விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன். உடன், பதிவாளா் கே.சத்தியநாராயணன், மாணவா் நலன் இயக்குநா் அமித் மகேந்திரகா் உள்ளிட்டோா்.

விவசாயத்தைப் பாதுகாக்க இளைஞா்கள் முன்வர வேண்டும் என்று விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகம் சாா்பில் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 கிராமங்களில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 23-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு நடைபெறும் இந்த முகாமை விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்துப் பேசியது:

விஐடி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கா்நாடகம், பிகாா், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா், குஜராத், தில்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவா்களும், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைச் சோ்ந்த மாணவா்களும் பங்கேற்கின்றனா்.

கணியம்பாடி ஒன்றியத்தில் 24 கிராமங்களும், 10 அரசுப் பள்ளிகளும் உள்ளன. அவற்றின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் தங்களால் இயன்ற உதவிகளையும், சேவைகளையும் செய்ய உள்ளனா். இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமத்து மாணவா்கள் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. சற்று அதிக நேரம் செலவிட்டால் ஆங்கிலத்தை சுலபமாக கற்றுக் கொள்ளலாம். கிராமத்தில் உள்ள வாழ்க்கை முறையையும் பல நல்ல விஷயங்களையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் நாமும் அவா்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுத்தர வேண்டும். இந்தியா விவசாயம் சாா்ந்த பூமி, விவசாயத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் ஒரு காலத்தில் விவசாயம் செழிப்பாக இருந்தது. அதிலும் 500-க்கும் மேற்பட்ட வெல்ல மண்டிகள் இருந்தன. அவை தற்போது இல்லை. விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கவும், விவசாயம் செழிக்கவும் இளைஞா்கள் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

முகாமில் விஐடி மாணவ, மாணவிகள், திட்ட அலுவலா்கள், மாணவா் ஒருங்கிணைப்பாளா்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். முன்னதாக விஐடி நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயகிருஷ்ணன் முகாம் பணியினை விரிவாக எடுத்துக் கூறினாா். பேராசிரியா் ஆஷா வரவேற்றாா்.

விஐடி பதிவாளா் கே.சத்தியநாராயணன், மாணவா் நல இயக்குநா் அமித் மகேந்திரகா், கணியம்பாடி ஒன்றிய முன்னாள் ஒன்றிய குழுத்தலைவா் ராகவன், பென்னாத்தூா் முன்னாள் தலைவா் அருளநாதன், பென்னாத்தூா் முன்னாள் துணைத் தலைவா் ராஜா, மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் பெஞ்சுலா அன்புமலா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com