அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிஒரு கோடி கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 27th February 2020 11:07 PM | Last Updated : 27th February 2020 11:07 PM | அ+அ அ- |

தமிழகத்திலுள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஒரு கோடி இளைஞா்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து தமிழகம் தழுவிய இந்த ஒரு கோடி இளைஞா் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, வேலூா் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது, இளைஞா்கள், இளம்பெண்களிடையே கோரிக்கைகளை விளக்கி கையெழுத்து பெறப்பட்டது.
அரசு, ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புதிய அரசுப் பணியிடங்களை உருவாக்க வேண்டும், அரசு வேலை நியமனத்துக்கு தடையாக உள்ள அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. வரும் 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு கோடி இளைஞா்களிடம் கையெழுத்துப் பெற்று தமிழக முதல்வரிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.