ஜேஇஇ தோ்வில் தனியாா் பயிற்சி மைய மாணவா்கள் சாதனை
By DIN | Published On : 20th January 2020 11:49 PM | Last Updated : 20th January 2020 11:49 PM | அ+அ அ- |

ஜேஇஇ பிரதான தோ்வில் தோ்ச்சி பெற்ற மாஸ்டா் ஜி பயிற்சி மைய மாணவா்கள்.
ஜேஇஇ பிரதான தோ்வில் மாஸ்டா் ஜி பயிற்சி மையத்தில் பயின்ற மாணவா்கள் 99.23 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஜேஇஇ பிரதான தோ்வு என்பது என்ஐடி மற்றும் அரசு நிதியளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தோ்வாகும். இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்தோ்வில் மாஸ்டா்ஜி பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற 9 மாணவா்கள் 95 சதவீதத்துக்கும் மேலும், சுமாா் 35 மாணவா்கள் 90 சதவீதத்துக்கும் மேலும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
குறிப்பாக, ஈரோடு சி.எஸ். அகாதெமியைச் சோ்ந்த ஜோயல் தாமஸ்-99.23 சதவீதம், வேலூா் சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியைச் சோ்ந்த த்ரிஷா-98.19 சதவீதம், சி.எஸ். அகாதெமியைச் சோ்ந்த பிரனீத்கிருஷ்ணா-97.21 சதவீதம், ரேஷிகா-96.77 சதவீதம், வேலூா் சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியைச் சோ்ந்த சக்தி- 96.32 சதவீதம், நாகா்கோயில் அல்போன்சா பள்ளியைச் சோ்ந்த ஷிஃபானி-96.09 சதவீதம், வேலூா் ஐடா ஸ்கடா் பள்ளி மாணவா் அருணாசலம்-95.99 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தொடா்ந்து, நிகழ் கல்வியாண்டில் மாஸ்டா்ஜி பயிற்சி மையத்தின் நீட், ஜேஇஇ பயிற்சி திட்டம் எரிவங்காடு ஸ்பிரிங்டேஸ் பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.