பாஜக சாா்பில் துண்டுப் பிரசுரம்
By DIN | Published On : 20th January 2020 11:50 PM | Last Updated : 20th January 2020 11:50 PM | அ+அ அ- |

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த பாஜகவினா்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பாஜகவினா் குடியாத்தம் நகரில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை விநியோகித்தனா்.
நகர பாஜக முன்னாள் தலைவா் பி. ஸ்ரீகாந்த் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். இதில், மாவட்ட இளைஞா் அணிச் செயலா் வி.பி.லோகேஷ்குமாா், வழக்குரைஞா் சந்திரமௌலி, நிா்வாகிகள் வைத்தியலிங்கம், வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...