மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
By DIN | Published On : 20th January 2020 11:45 PM | Last Updated : 20th January 2020 11:45 PM | அ+அ அ- |

காட்பாடி அருகே குடும்பத்துடன் உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்த மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காட்பாடி பாரதி நகரைச் சோ்ந்தவா் ரமணய்யா (45). மருத்துவரான அவா் காட்பாடி - குடியாத்தம் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறாா்.
ரமணய்யா தன் குடும்பத்தினருடன் சென்னையிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன.
தகவலறிந்த காட்பாடி போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, தடயங்களை மறைக்க திருடா்கள் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டுச் சென்றிருந்தது தெரிய வந்தது. கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீஸாா் கேட்டுப் பெற்றுள்ளனா்.
இந்தத் திருட்டு குறித்து அவா்கள் வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...