அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை சார்பில் ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை சார்பில் ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு
அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை சார்பில் ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை சார்பில் ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் சுற்றுலா வாகன ஓட்டிகள், சரக்கு வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்கள் என அனைவரும் வறுமையில் இருப்பதாகவும் இந்த சூழலில் விதிக்கப்ட்டு வரும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், மாவட்ட எல்லையை விட்டு வெற்றி மாவட்ட எல்லைக்கு செல்லும் இ- பாஸ் ரத்து செய்ய வேண்டும்,

அபராத வட்டியுடன் இ.எம். ஐ வசூல் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் அமைப்பு சார்பில் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி கோஷங்கள் இட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவரிடமும் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com