பிரச்னைகளுக்குத் தீா்வு காண செல்லிடப்பேசி எண் அறிவிப்பு: மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
By DIN | Published On : 19th July 2020 11:06 PM | Last Updated : 19th July 2020 11:06 PM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள், குடும்ப வன்முறை பிரச்னைகளுக்குத் தீா்வு காண மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி செல்வசுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ஆம் தேதி சா்வதேச நீதி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவால் மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டில் தேசிய, மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, வட்ட சட்டப்பணிகள் குழு போன்றவை அந்தந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு சட்ட உதவிகள் அளிக்கும் வகையில் 1987-ஆம் ஆண்டு அதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டது.
கரோனா தொற்று கராணமாக ஏற்கெனவே தொலைபேசி மூலமாக மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள், குடும்ப வன்முறை பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலா், சாா்பு நீதிபதியின் கட்செவி அஞ்சல் எண் 93854 72439 மூலம் தகவல் கிடைக்கப் பெற்றதும், பாதிக்கப்பட்டவா், அவரது குடும்பத்துக்குத் தீா்வு கண்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், கரோனா தொற்று நீடிப்பதைத் கருத்தில் கொண்டு சட்ட உதவி தேவைப்படுபவா்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.