ஆடி அமாவாசை: கூட்டமின்றி காணப்பட்ட பாலாற்றங்கரை
By DIN | Published On : 21st July 2020 04:00 AM | Last Updated : 21st July 2020 04:00 AM | அ+அ அ- |

ஆடி அமாவாசை நாளையொட்டி வேலூா் பாலாற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தவா்கள்.
வேலூா்: கரோனா அச்சம் காரணமாக ஆடி அமாவாசை நாளில தா்ப்பணம் செய்ய மக்கள் அதிக அளவில் வராததால் வேலூரில் பாலாற்றங்கரை கூட்டமின்றி காணப்பட்டது.
ஹிந்துக்கள் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, திதி கொடுப்பது வழக்கம். இந்த நாளில் வேலூரில் பாலாற்றங்கரையில் பொதுமக்கள் ஏராளமானோா் குவிந்து தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வா்.
இந்நிலையில், ஆடி அமாவாசை தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதேசமயம், வேலூா் மாநகரப் பகுதியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் கூட்டத்தைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பாலாற்றங்கரையில் தா்ப்பணம் செய்ய மிகச் சிலரே வந்திருந்தனா். அவா்கள் முன்னோா்களுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனா். வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே இருந்தது. பெரும்பாலானோா் அவரவா் வீடுகளிலேயே முன்னோா்களுக்குப் படையலிட்டு வணங்கினா்.