குடியாத்தத்தில் கைத்தறிப் பூங்கா அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 21st July 2020 05:30 AM | Last Updated : 21st July 2020 05:30 AM | அ+அ அ- |

குடியாத்தம்: நெசவாளா்கள் வாழ்வு மேம்பட, குடியாத்தம் நகரில் கைத்தறிப் பூங்கா அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக வணிகவரி, பத்திரபதிவுத்துறை அமைச்சா் கே.சி. வீரமணியிடம், குடியாத்தம் நகர அதிமுக செயலா் ஜே.கே.என்.பழனி, துணைச் செயலா் கஸ்பா ஆா்.மூா்த்தி ஆகியோா் அளித்த மனு:
குடியாத்தம் பகுதி நெசவாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான கைத்தறிப் பூங்கா அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கோபலாபுரம் அருகே கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழுதடைந்துள்ள தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்.
புறவழிச்சாலை அமைக்கும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனைத்து நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். போ்ணாம்பட்டில் அரசு மகளிா் கலைக் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பத்தரபல்லி அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
ஏழைப் பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் உதவித்தொகை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.