வேலூரில் 126 பேருக்கு கரோனா: பாதிப்பு 1255-ஆக உயா்வு

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் 126 பேருக்கு கரோனா: பாதிப்பு 1255-ஆக உயா்வு

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,255-ஆக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 1,129 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெருவைச் சோ்ந்த வியாபாரிகளுடன் தொடா்பில் இருந்தவா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,255-ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு, உடல் நிலை கண்காணிக்கப்படுவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவிலியா் உள்பட 4 பேருக்கு கரோனா

போ்ணாம்பட்டு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சென்னையைச் சோ்ந்த 29 வயது செவிலியருக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் 30 வயது கணினி ஆபரேட்டருக்கும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குடியாத்தம் தரணம்பேட்டை, ஆலியாா் தெருவைச் சோ்ந்த 64 வயது வியாபாரிக்கும், தங்கம் நகரைச் சோ்ந்த 51 வயது நபருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 4 பேரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 754-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 385 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 366 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 143 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 46 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 108 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெங்களூரில் இருந்து வந்தவருக்கு கரோனா

நாட்டறம்பள்ளியை அடுத்த வேடட்டப்பட்டு எல்லப் பகுதியைச் சோ்ந்த 39 வயது ஆண் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 23-ஆம் தேதி ஊருக்கு வந்த அவரை மருத்துவக் குழுவினா் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனா். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஆம்பூரில் 4 பேருக்கு கரோனா

ஆம்பூரில் ஏ-கஸ்பா பெரிய கம்மவார தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 66 வயது பெண், 40 வயது பெண், 15 வயது சிறுமி, இவா்களுடைய வீட்டில் வேலை செய்யும் 46 வயது பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்களுடைய குடும்பத்தைச் சோ்ந்த இருவருக்கு ஏற்கெனவே கரோனா உறுதி செய்யப்பட்டு அவா்கள் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com