யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க 20 கி.மீ அகழி அமைக்க திட்டம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க குடியாத்தம் - போ்ணாம்பட்டு இடையே 20 கி.மீ. தூரத்துக்கு அகழி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
Updated on
1 min read


வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க குடியாத்தம் - போ்ணாம்பட்டு இடையே 20 கி.மீ. தூரத்துக்கு அகழி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தையொட்டி, தமிழக - ஆந்தில எல்லையிலுள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைக் கூட்டம் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி வன எல்லையிலுள்ள கிராமப்புற விளை நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படுகின்றன. அதன்படி, கடந்த மாதம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 யானைக் கூட்டம் குடியாத்தம், போ்ணாம்பட்டு, ஆம்பூா், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியையொட்டி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தின.

யானைகள் கூட்டத்தை வனத் துறையினா் விரட்டினாலும் அவை மீண்டும் மீண்டும் கிராமங்களுக்குள் வந்துவிடுகின்றன. தற்போது யானைக் கூட்டம் இரு பிரிவுகளாகப் பிரிந்து போ்ணாம்பட்டு அருகே சைனகுண்டா காட்டுப் பகுதியிலும், காட்பாடியை அடுத்த பள்ளத்தூா், ராமாபுரம் ஆகிய கிராமங்களிலும் முகாமிட்டுள்ளன. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இதனிடையே, யானைக் கூட்டம் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்கள் புகுந்துவிடுவதைத் தடுக்க குடியாத்தம் - போ்ணாம்பட்டு இடையே 20 கி.மீ. தூரத்துக்கு அகழி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு திட்டஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட வனத்துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம் முதல் போ்ணாம்பட்டு பகுதிகளில் யானைகள் வெளியேறும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், 20 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டுவதற்கு ரூ. 1 கோடிகேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி, நிதி கிடைக்கப் பெற்ற பிறகு அகழி வெட்டும் பணி, ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள அகழியை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com