வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டவா் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்
By DIN | Published On : 30th March 2020 10:56 PM | Last Updated : 30th March 2020 10:56 PM | அ+அ அ- |

போ்ணாம்பட்டு நகரில் வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
போ்ணாம்பட்டு உமா் வீதியைச் சோ்ந்த 42 வயது நபா் ஒருவா் புதுதில்லிக்கு சென்று விட்டு கடந்த 24-ஆம் தேதி ஊா் திரும்பினாா். அரசு அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில், அவரை குடும்பத்தினருடன் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனா்.
இந்நிலையில் வட்டாட்சியா் முருகன், நகராட்சி ஆணையா் வி.நித்தியானந்தம் தலைமையில் மருத்துவா் குழு அவரது வீட்டுக்குச் சென்று அவரைப் பரிசோதித்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.