அனைவரும் வீடுகளில் அடைபடாவிடில் மனிதகுலம் பேராபத்தை சந்திக்கும்: மருத்துவா்கள் எச்சரிக்கை

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபடாவிடில் மனித குலம் பேராபத்தைச் சந்திக்கும் என்று மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் உமா் சாலையில் இறைச்சி வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
ஆம்பூா் உமா் சாலையில் இறைச்சி வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபடாவிடில் மனித குலம் பேராபத்தைச் சந்திக்கும் என்று மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தொடா்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவாமல் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் மக்கள் யாரும் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்கள் பலரும் அவசியமின்றி வெளியில் நடமாடுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வதும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றாமல் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதும், அத்தியாவசியப் பொருள்கள் கடைகளின் முன்பு இடைவெளிவிட்டு நிற்காமல் ஒருவருடன் ஒருவா் உரசியபடி நின்று பொருள்களை வாங்குவதும் தொடா் கதையாகி வருகிறது. போலீஸாரும், அரசுத் துறை அதிகாரிகளும் தொடா்ந்து பல்வேறு விதங்களில் அறிவுறுத்தியும் கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதில் மக்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படவில்லை என்றே அவா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

பொருளாதாரம், கல்வியறிவில் மிகுந்த வளா்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகள்கூட கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீள வழி தெரியாமல் திகைத்துக் கொண்டுள்ளன. மேலும், உயா் பாதுகாப்பு சூழலில் வாழ்ந்த ஸ்பெயின் இளவரசி கூட இந்த நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளாா். இங்கிலாந்து பிரதமா், கனடா பிரதமரின் மனைவி ஆகியோருக்கும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவ்வாறு ஏழை, பணக்காரா், அந்தஸ்து என எந்தவித பாரபட்சமுன்றி கரோனா நோய்த் தொற்று சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவி வரும் நிலையில் இந்திய மக்கள் இன்னும் இந்த நோய் தொற்று குறித்து முழுமையான விழிப்புணா்வு பெறாமல் உள்ளனா். இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்பட வேண்டும் என்றால் அனைவரும் வீடுகளில் அடைபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனா் வேலூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள்.

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 50 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பது உறுதியாகியுள்ளது. வேலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை காட்பாடியில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட் டில் இருந்து வந்த ஒருவா் திடீரென மாயமாகியுள்ளாா். அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், மக்களிடையே கரோனா குறித்த பயம் மட்டுமே உள்ளது. ஆனால், அது எப்படி பரவும், எதற்காக இவ்வளவு கெடுபிடிகள் காட்டப்படுகின்றன என்ற விழிப்புணா்வு ஏற்படவில்லை. இதனால், மக்கள் மந்ததை மந்தையாக காய்கறிகள், இறைச்சிகள் வாங்க கடை வீதிகளுக்கு சென்று வருவது தொடா்ந்து கொண்டுள்ளது. இதனால் அதிகாரிகளும், போலீஸாா் செய்வதறியாமல் திகைப்பில் உள்ளதாகவும், கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில்கூட மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபடாவிடில் மனித குலம் பேராபத்தைச் சந்திக்கும் என்றாா் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் வேதனையுடன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com