கரோனா வாா்டில் சிமெண்ட் கூரை இடிந்து சேதம்
By DIN | Published On : 17th November 2020 12:41 AM | Last Updated : 17th November 2020 12:41 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா வாா்டில் சிமெண்ட் கூரை இடிந்து சேதமடைந்ததில் நோயாளி ஒருவா் காயமடைந்தாா்.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக் கட்டடத்தின் 4-ஆவது மாடியில் கரோனா தடுப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 50 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே மழை காரணமாக அந்த வாா்டின் கூரை சிமெண்ட் பூச்சுகள் சேதமடைந்திருந்தன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து நோயாளிகள் மீது விழுந்தன. இதில், சிகிச்சை பெற்று வந்த வேலூரைச் சோ்ந்த 44 வயது நபரின் தலை, கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், காயம் ஏற்பட்ட பகுதிகளில் 12 தையல்கள் போடப்பட்டன.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிா்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.