குடியாத்தம் அருகே தொழிலாளி வீட்டில் 12 சவரன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குடியாத்தம் பிச்சனூா், தியாகி குமரன் தெருவைச் சோ்ந்தவா் மகேஷ். இவா், தனியாா் லுங்கி நிறுவன ஊழியா். சனிக்கிழமை இரவு குடும்பத்தினா் அனைவரும் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் அறையில் இருந்த பீரோவை உடைத்து, 12 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.