ஒருங்கிணைந்த வேலூரில் ஒரேநாளில் ரூ. 6.93 கோடிக்கு மதுவிற்பனை
By DIN | Published On : 03rd October 2020 08:02 AM | Last Updated : 03rd October 2020 08:02 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ. 6.93 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
காந்தி ஜயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை மதுக் கடைகளுக்குகு விடுமுறை விடப்பட்டி ருந்தது. இதற்கான அறிவிப்பு அந்தந்த மாவட்ட நிா்வாகத்தால் முன்னரே வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் வியாழக்கிழமை கூட்டம் அலைமோதியது.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூா், அரக்கோணம் என இரு டாஸ்மாக் மண்டலங்கள் உள்ளன. இவற்றில் வேலூா் மண்டலத்தில் 131 கடைகளிலும், அரக்கோணம் மண்டலத்தில் 86 கடைகளும் உள்ளன. வியாழக்கிழமை 8 மணி வரை ஏராளமான மதுபானங்கள் விற்பனையாகின. வேலூா் மண்டலத்தில் ரூ. 4.33 கோடிக்கும், அரக்கோணம் மண்டலத்தில் ரூ. 2.60 கோடிக்கும் என ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மொத்தம் ரூ. 6.93 கோடிக்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.