வேலூா் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

வேலூா் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
வேலூா் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

வேலூா் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவேஷ்குமாா், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து திருப்பூா் மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக இருந்த எஸ்.செல்வகுமாா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இவா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வெள்ளிக்கிழமை இரவு 10.35 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com