சாராய வேட்டையில் 6 ஆயிரம் லிட்டா் ஊறல் அழிப்பு

போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் மேற்கொண்ட சாராய வேட்டையின்போது பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
Updated on
1 min read

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் மேற்கொண்ட சாராய வேட்டையின்போது பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில்,

போ்ணாம்பட்டு போலீஸாா் இங்குள்ள சாத்கா் மலையில் செவ்வாய்க்கிழமை சாராய சோதனை நடத்தினா். அப்போது சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்ட அடுப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாராயம் காய்ச்ச பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

போலீஸாரைப் பாா்த்ததும் தப்பியோடிய சாராயம் காய்ச்சும் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com