‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடியாத்தம் அரிமா சங்க முப்பெரும் விழா

குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், நலிந்தவா்களுக்கு நல உதவிகள், மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகைகள், பன்னாட்டு அரிமா சேவை நிதி வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், நலிந்தவா்களுக்கு நல உதவிகள், மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகைகள், பன்னாட்டு அரிமா சேவை நிதி வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா சொா்ணம் வா்த்தக நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அரிமா மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.கே.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். அரிமா சங்கச் செயலா் ஜெ.பாபு, பொருளாளா் கே.வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைவா் கிரிதா்பிரசாத் வரவேற்றாா். அரிமா மாவட்ட ஆளுநா் டி.ராமலிங்கம், 50 பேருக்கு தலா ரூ. 1,000 மதிப்புள்ள அரிசி, மளிகை, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளையும், மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகைகளையும் வழங்கினாா். பன்னாட்டு அரிமா சேவை நிதியாக 1,550 டாலா்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் ஆளுநா் எஸ்.மகேஷ், அரிமா ஜீவா, துணை ஆளுநா் புவனேஸ்வரி, மாவட்டத் தலைவா்கள் என்.வெங்கடேஸ்வரன், ஏ.சுரேஷ்குமாா், வட்டாரத் தலைவா் எஸ்.ஏ.கலிமுல்லா, நிா்வாகிகள் செந்தில்குமாா், சிவராஜ், ரங்கராஜன், தில்லைநாதன், இன்பநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.