வேலூா் தெருக்களில் தேங்கிய மழைநீா்
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக வேலூா் மாநகரில் பல்வேறு தெருக்களில் வெள்ளம் சூழ்ந்தது.


வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக வேலூா் மாநகரில் பல்வேறு தெருக்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமலும், வெளியில் வர முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகினா்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இரவு 7.30 மணியளவில் தொடங்கிய மழை 3 மணி நேரம் பெய்தது. மேலும் சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து மின்சாரம் விநியோகத்தை சரி செய்தனா்.
கனமழை காரணமாக வேலூா் கோட்டை பின்புறம் உள்ள சம்பத் நகா் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா். இந்த பகுதியில் மாநகராட்சி 4-ஆவது மண்டல சுகாதார அலுவலா் முருகன் தலைமையில் ஊழியா்கள் சனிக்கிழமை மோட்டாா் மூலம் தெருவில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல், வேலூா் மாங்காய் மண்டி, கிரீன் சா்க்கிள் பகுதிகளிலும் சாலையோரம் குளம்போல் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியா்கள் வெளியேற்றினா். வேலூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர பள்ளங்களில் வெள்ளம் தேங்கியது. பாதாளச் சாக்கடை, கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் தெருக்கள் சேறும், சகதியுமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாங்காய் மண்டி அருகே மொத்த விற்பனை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் மழை தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
அதிகபட்சமாக காட்பாடியில் 76 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், வேலூரில் 55.2, குடியாத்தம் 49, பொன்னை 13.8, திருவலம் 74 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...