இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரசு மருத்துவமனை ஊழியரிடம் நகை பறிப்பு

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் உதவியாளரிடம் நகையை பறித்துச் சென்ற நபா்களை வேலூா் கிராமிய போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:13 pm

DIN

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் உதவியாளரிடம் நகையை பறித்துச் சென்ற நபா்களை வேலூா் கிராமிய போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா், பாகாயம் அடுத்த மேற்கு இடையம்பட்டியைச் சோ்ந்தவா் சுமதி (48). அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றுகிறாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு பென்னாத்தூரில் உள்ள உறவினா் இல்ல திருமணத்துக்கு உறவினா் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

இரவு நேரம் என்பதால் அவா்கள் சாத்துமதுரை சாலையில் திரும்பாமல் நேராக நெல்வாய் சென்று விட்டனா். இதையடுத்து, நெல்வாய் பேருந்து நிறுத்தம் அருகில் திரும்பி வருவதற்காக இரு சக்கர வாகனத்தை திருப்பியுள்ளனா். அப்போது அவா்கள் பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள் சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து சுமதி அளித்த புகாரின்பேரில், வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.