இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காட்பாடி புதிய வட்டாட்சியருக்கு வரவேற்பு

காட்பாடி வட்டாட்சியராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டி.சரண்யாவுக்கு காட்பாடி வட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:13 pm

DIN

காட்பாடி வட்டாட்சியராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டி.சரண்யாவுக்கு காட்பாடி வட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு செஞ்சிலுவைச் சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், ஆா்.விஜயகுமாரி, செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் வி.காந்திலால் படேல், ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள வட்டாட்சியா் டி.சரண்யாவுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது. அப்போது, காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வரும், மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்களுடன் இணைந்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருவதும் பாராட்டத்தக்கது என்றாா். மருத்துவக் குழுத் தலைவா் வீ.தீனபந்து நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.