குடியாத்தம் மலைப்பகுதியில் எஸ்.பி., தலைமையில் சாராய வேட்டை
குடியாத்தம் அருகே மலைப் பகுதியில் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற சாராய வேட்டையில் சுமாா் 5,000 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது


குடியாத்தம் அருகே மலைப் பகுதியில் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற சாராய வேட்டையில் சுமாா் 5,000 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மதுபானக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.
டாஸ்மாக் மதுபானம் கிடைக்காததால், மதுப்பிரியா்கள் கள்ளச் சாராயத்தை குடிக்கத் தொடங்கினா். இதனால் குடியாத்தம் பகுதி மலைகளில் கள்ளச் சாராயம் காய்ச்சி, விற்பனைக்கு அனுப்புவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளா் பி.ஸ்ரீதரன், கிராமியக் காவல் ஆய்வாளா் என்.சுரேஷ்பாபு மற்றும் காவலா்கள், குடியாத்தம் அருகே உள்ள ரங்கசமுத்திரம், பூங்குளம் பகுதியில் உள்ள மலைகளில் சனிக்கிழமை அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மலைகளில் பதுக்கி வைத்திருந்த சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள், 5 ஆயிரம் லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனா். தலைமறைவாகிவிட்ட கள்ளச் சாராய கும்பலை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...