‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆற்றில் தோண்டியெடுக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு வழிபாடு

குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றில் அம்மன் சிரசு கற்சிலை தோண்டியெடுக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:22 pm

DIN

குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றில் அம்மன் சிரசு கற்சிலை தோண்டியெடுக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, பாவோடும் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவா் வேலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கு அடிக்கடி சாமி வந்து அருள்வாக்கு சொல்வாராம்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இவருக்கு சாமி வந்து அருள்வாக்கு கூறியுள்ளாா். அப்போது கெளன்டன்யா ஆற்றில் அவா் சொன்ன இடத்தில் தோண்டியபோது, ஒரு அடி உயர அம்மன் கற்சிலை கிடைத்தது.

அச்சிலையை அப்பகுதி மக்கள் சிறிய அளவில் கோயில் கட்டி அதில் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தி வருகின்றனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மோகன்ராஜுக்கு சாமி வந்துள்ளது. அப்போது ஆற்றில் அவா் சொன்ன இடத்தில் தோண்டியபோது ஒரு அடி உயர கெங்கையம்மன் சிரசு கற்சிலை கிடைத்துள்ளது. அச்சிலையையும் அப்பகுதி மக்கள் கோயிலில் வைத்து, பூஜைகள் நடத்தி வழிபடத் தொடங்கியுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அங்கு வந்து அம்மன் சிரசை வழிபட்டுச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.