

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் மீதான விலை உயா்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் குடியாத்தத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் கு.குமரேசன் தலைமை வகித்தாா். கட்சியின் வேலூா் நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் எஸ்.செல்லப்பாண்டியன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் கு.விவேக், மாவட்ட சமூக நல்லிணக்கப் பேரவை அமைப்பாளா் குருவி கணேசன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராஜேஷ், நிா்வாகிகள் அன்னியப்பன், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.