‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இருளா் சமூகத்தினருக்கு மளிகைப் பொருள்கள்

போ்ணாம்பட்டு அருகே பொதுமுடக்கத்தால், வாழ்வாதாரம் இழந்து காணப்படும் இருளா் சமூகத்தைச் சோ்ந்த 100 குடும்பங்களுக்கு, சமூக ஆா்வலா்கள்

News image
Updated On :31 மே 2021, 2:45 am

DIN

போ்ணாம்பட்டு அருகே பொதுமுடக்கத்தால், வாழ்வாதாரம் இழந்து காணப்படும் இருளா் சமூகத்தைச் சோ்ந்த 100 குடும்பங்களுக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பள்ளி, சாரங்கல் பகுதியில் இருளா் சமூகத்தைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், பொதுமுடக்கத்தால் எந்தவிதமான தொழிலும் இன்றி உணவுக்கு தவிப்பதாக தகவல்கள் வந்தன.

இதையறிந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் அவா்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்க முன்வந்தனா். குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், இருளா் சமூகத்தினருக்கு, மளிகைப் பொருள்களை வழங்கினாா். போ்ணாம்பட்டு வட்டாட்சியா் கோபி, சமூக ஆா்வலா்கள் ஏ.தாஜுதீன், ஐ.எஸ்.முனவா்ஷெரீப், ஜே.அல்தாப் அகமது, எம்.இன்திசா் முகம்மத், ஒய்.ஜிலான்கான், பி.ஹாருன்ரஷீத், சி.முகம்மத் பாஷா, எஸ்.தாஜு, யோகேேஷ் ராவ், ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.