இருளா், பழங்குடியினருக்கு மளிகைப் பொருள்கள்
By DIN | Published On : 17th August 2021 01:05 AM | Last Updated : 17th August 2021 01:05 AM | அ+அ அ- |

இருளா்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய வேலூா், குடியாத்தம் கனவு அறக்கட்டளை நிா்வாகிகள்.
குடியாத்தம்: வேலூா் கனவு அறக்கட்டளையின் 17-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, குடியாத்தம் காளியம்மன்பட்டியை அடுத்த சோனியாகாந்தி நகரில் வசிக்கும் இருளா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 30 குடும்பங்களுக்கு தலா ரூ. 850 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
கனவு அறக்கட்டளையின் வேலூா், குடியாத்தம் நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், தம்மின், பரமாத்மா, தேவமுகுந்தன், காா்த்திக் ஆகியோா் மளிகைப் பொருள்களை வழங்கினா்.