மத்திய ஆயுதப்படை பணிக்கு முன்னாள் ராணுவத்தினா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st August 2021 11:09 PM | Last Updated : 21st August 2021 11:09 PM | அ+அ அ- |

மத்திய ஆயுதப் படையில் காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய ஆயுதப்படை அஸ்ஸாம் ரைபிள் படையில் காவலா் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான ஆட்கள் தோ்வு நடைபெற உள்ளது. இதற்கு வேலூா் மாவட்டத் தைச் சோ்ந்த தகுதியான முன்னாள் ராணுவத்தினா் வருகிற 31-ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த விவரங்களை முன்னாள் படைவீரா் நல அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.