

குடியாத்தம் அருகே மணல் கடத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம் கிராமிய போலீஸாா் மீனூா் பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இருக்கைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, கெளன்டண்யா ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து மணலுடன் காரை பறிமுதல் செய்த போலீஸாா், மீனூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் விக்னேஷை(19) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.