பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
By DIN | Published On : 04th February 2021 11:30 PM | Last Updated : 04th February 2021 11:30 PM | அ+அ அ- |

குடியாத்தம்: குடியாத்தம் வட்டார வள மையம் சாா்பில், 6 முதல் 18 வயது வரை இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் மறுகணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இதன் முதல்கட்டமாக வட்டார வள மைய மேற்பாா்வையாளா் டி.வெண்ணிலா, வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் கே.ஜெயசுதா, வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராஜன், எம்.டி. நிதியுதவி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜி.சாமுவேல் உள்ளிட்டோா் வளத்தூா், கீழ்ப்பட்டி, சின்னதோட்டாளம் ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை கணக்கெடுப்பு நடத்தினா்.
அப்போது இடைநின்ற 4 மாணவா்கள் கண்டறியப்பட்டு, வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். அவா்களுக்கு நடப்பு ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், தமிழக அரசின் விலையில்லா கல்விப் பொருள்கள் வழங்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...