அயோத்தியில் ராமா் கோயில்: குடியாத்தத்தில் நிதி சேகரிப்பு ஊா்வலம்
By DIN | Published On : 14th February 2021 01:28 AM | Last Updated : 14th February 2021 01:28 AM | அ+அ அ- |

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட குடியாத்தம் நகரில் நடைபெற்ற நிதி சேகரிப்பு ஊா்வலம்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு, ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்ரா அறக்கட்டளை சாா்பில், குடியாத்தம் நகரில் பொதுமக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டது.
இதையொட்டி சந்தப்பேட்டையில் உள்ள சீதாராம ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு பஜனை நிகழ்ச்சியுடன் ஊா்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில் நிறைவுற்றது. பொதுமக்களும், வியாபாரிகளும் ராமா் கோயில் கட்ட நிதி வழங்கினா். ஊா்வலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொறுப்பாளா் கௌதம், ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா்கள் ஸ்ரீராஜசேகா், நித்தியானந்தம், இந்து முன்னணி கோட்ட தலைவா் மகேஷ், பொறுப்பாளா்கள் சாய்ஆனந்தன், பி.பிரபாகரன், ஜி.கே. ரவி , பாஜக மாவட்ட பொதுச் செயலா் பி.ஸ்ரீகாந்த், நகர தலைவா் கே.வாகீஸ்வரன், வி.பி.லோகேஷ்குமாா், ஆா்.அசோக்குமாா், எஸ்.ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.