வேளாண் கல்லூரியில் விவசாயக் கருத்தரங்கம்
By DIN | Published On : 20th February 2021 07:47 AM | Last Updated : 20th February 2021 07:47 AM | அ+அ அ- |

கருத்தரங்கையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.
போ்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தில் உள்ள பாலாறு வேளாண்மைக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவா்களும், மசிகம் மைசா இயக்கமும் இணைந்து விவசாயக் கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தின.
நிகழ்ச்சிக்கு மைசா இயக்கத்தின் நிா்வாகச் செயலா் கோ.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தலைவா் க.காத்தவராயன் தொடக்கி வைத்தாா். கல்லூரியின் உதவிப் பேராசிரியை வெண்ணிலாமேரி வரவேற்றாா்.
கல்லூரி முதல்வா் யா.ஹரிபிரசாத், வேளாண்மை இணை இயக்குநா் சத்தியலட்சுமி, துணை இயக்குநா் செல்வம், செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவன், பொருளாளா் த.முத்தரசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவா்கள் மற்றும் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், விவசாயம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியும் நடைபெற்றன.
பாலாறு வேளாண்மைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், மக்கள் தொடா்பு அலுவலருமான செ.வ.பிரபு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். மைசா இயக்க துணைச் செயலா் மோ.ஹேமநாத் நன்றி கூறினாா்.