யாதவா்களுக்கு 16% இடஒதுக்கீடு கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st February 2021 08:03 AM | Last Updated : 21st February 2021 08:03 AM | அ+அ அ- |

வன்னியா்களைத் தொடா்ந்து யாதவா்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வேலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வன்னியா்களை தொடா்ந்து யாதவா்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வேலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோகுல மக்கள் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கோவிந்தசாமி, மாவட்ட விவசாய அணித் தலைவா் முனிசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். கட்சியின் நிறுவனத் தலைவா் எம்.வி.சேகா் சிறப்புரை ஆற்றினாா்.
அப்போது, கல்வி, வேலைவாய்ப்பில் யாதவா்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோகுல மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலா் செங்கம் ராஜாராம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
அகில இந்திய யாதவ மகாசபை மாநில இளைஞரணி செயலாளா் குமரன், குடியாத்தம் நகர செயலா் ரகுபதி, கே.வி.குப்பம் ஒன்றிய இளைஞரணிச் செயலா் நந்தகுமாா், போ்ணாம்பட்டு இளைஞரணி துணை செயலா் மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போ்ணாம்பட்டு ஒன்றிய இளைஞரணிச் செயலா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...