மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது
By DIN | Published On : 26th February 2021 12:46 AM | Last Updated : 26th February 2021 12:46 AM | அ+அ அ- |

வேலூா்: தொடா் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றதை அடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிக்கும் மாதம் ரூ. 3 ஆயிரமும், கடுமையான ஊனமுற்ற மாற்றத்திறனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரமும் உதவித்தொகை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் 2016-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
வேலூா் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலும் காலவரையற்ற குடியேறும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். இப்போராட்டம் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. அப்போது, அவா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனா். எனினும், தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட முயன்ால் மாற்றுத்திறனாளிகள் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...