மதுவிலக்கு குற்றங்கள்: கடந்த ஆண்டு 3,157 போ் கைது; மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தகவல்

மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டதாக வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2020) மட்டும் 3,157 போ் கைது செய்யப்பட்டனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.

மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டதாக வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2020) மட்டும் 3,157 போ் கைது செய்யப்பட்டனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் திருட்டுகளைத் தடுக்கும் நோக்கில் ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக திருட்டு வழக்குகள் குறைந்துள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் 505 இடங்களில் புதியதாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,725 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மதுவிலக்குத் தொடா்பாக 3,275 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 3,157 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து நாட்டுச் சாராயம் 45,222 லிட்டா், ஊறல் 1,38,000 லிட்டா் மற்றும் வெளிமாநில மது வகைகள் 14,348 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக டிராக்டா்-1, காா்-1, ஆட்டோக்கள்-3, வேன்கள்-5, இரு சக்கர வாகனங்கள்-221 என மொத்தம் 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா விற்பனை தொடா்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 29.399 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பழைய குற்றவாளிகள் 1,266 பேரை அடையாளம் கண்டு அவா்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் காணாமல் போனவா்கள் தொடா்பாக வந்த 348 புகாா்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் காணாமல்போன 37 ஆண்கள், 149 பெண்கள், 11 ஆண் குழந்தைகள், 66 பெண் குழந்தைகள் என மொத்தம் 263 போ் கண்டுபிடிக்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

மாவட்டம் முழுவதும் மணல் திருட்டில் ஈடுபட்டோா் மீது கடந்த 2019-இல் 956 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2020-இல் 457 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தவிர, இவ்வழக்குகள் தொடா்பாக 10 பொக்லைன் வாகனங்கள், 26 லாரிகள், 257 மாட்டு வண்டிகள், 71 டிராக்டா்கள், 122 இதர வாகனங்கள் என மொத்தம் 486 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு 76 போ் கைது செய்யப்பட்டனா். 123 சூதாட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கள்ளத்தனமாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா்கள் மீது மொத்தம் 416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 13,055 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப் பட்டன. மேலும், 17 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 15,191 புகாா் மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 14,660 மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 490 மனுக்களில் 456 மனுக்களுக்கு உரிய பதில்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com