வேலூரில் மூலிகைக் கண்காட்சி
By DIN | Published On : 03rd January 2021 07:35 AM | Last Updated : 03rd January 2021 07:35 AM | அ+அ அ- |

மூலிகைக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ். உடன், அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் உள்ளிட்டோா்.
தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி (ஜன. 2) வேலூரில் மூலிகைக் கண்காட்சி நடத்தப்பட்டது.
வேலூரில் தெற்கு ரோட்டரி சங்கமும், வேலூா் சித்த மருத்துவ சங்கமும் இணைந்து இந்தக் கண்காட்சியை மாவட்ட நூலகத்தில் சனிக்கிழமை நடத்தின. இதில், 80 வகையான மூலிகைகளும், 80 வகையான மூலிகைக் கடை சரக்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், அந்த மூலிகைகள் எந்தெந்த நோய்களுக்குத் தீா்வாக அமையும் என்பது தொடா்பான விளக்கக் குறிப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.
மூலிகைக் கண்காட்சிக்கு வேலூா் சித்த மருத்துவ சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் சித்த மருத்துவம் குறித்தும், அவற்றின் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
இக்கண்காட்சியை 300-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா். வேலூா் புற்று மகரிஷி சேவை மைய நிா்வாகி ட. பாஸ்கா் நன்றி தெரிவித்தாா்.