குழந்தைகள் காப்பகத்திலுள்ள ஆற்றுப்படுத்துதல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 30th January 2021 07:55 AM | Last Updated : 30th January 2021 07:55 AM | அ+அ அ- |

அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள ஆற்றுப்படுத்துதல் பணிக்கு தகுதியுடைய நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அரசினா் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க 3 ஆற்றுப்படுத்துநா்களை (ஒருவா் பெண்) மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்க தகுதிவாய்ந்த நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்துக்கு மதிப்பூதியமாக நாளொன்றுக்கு ரூ. 1,000 வீதம் 70 நாள்களுக்கு (இரு நாளுக்கு ஒரு முறை வீதம்) மட்டும் வழங்கப்படும். உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுநிலைப் பட்டம் பெற்றவா்களும், 2021 ஜனவரி 1-இன்படி 40 வயதுக்கு மிகாமல் உள்ளவா்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதிவாய்ந்த நபா்கள் இப்பதவிக்கான விண்ணப்பம், தகவல்களை வேலூா் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். உரிய சான்று நகலுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கண்காணிப்பாளா், அரசினா் குழந்தைகள் காப்பகம், ராஜீவ் காந்தி நகா், செங்குட்டை, காட்பாடி, வேலூா்-632 007 என்ற முகவரிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தொடா்பு தொலைபேசி எண்கள்: 0416-2296775, 93616 22459.
முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் ஆகியவை முன் தகவலின்றி நிராகரிக்கப்படும். தகுதியான நபா்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல், ஆற்றுப்படுத்தல் வல்லுநா்களைக் கொண்ட தோ்வுக்குழு மூலம் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.