பைக் திருட்டில் இளைஞா் கைது:7 வாகனங்கள் மீட்பு
By DIN | Published On : 07th July 2021 11:40 PM | Last Updated : 07th July 2021 11:40 PM | அ+அ அ- |

வேலூா்: காட்பாடி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்று வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 7 வாகனங்கள் மீட்கப்பட்டன.
காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் கடந்த 2 மாதங்களாக வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போயின. இதுகுறித்த புகாரின்பேரில் காட்பாடி போலீஸாா் இரு சக்கர வாகன திருட்டு கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், காட்பாடி காந்தி நகா் பிள்ளையாா் கோயில் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த காட்பாடி வி.ஜி.ராவ் நகரைச் சோ்ந்த சுந்தா் (எ) வெள்ளையை (36) பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா் காட்பாடி வி.ஜி.ராவ் நகா் பகுதியில் 7 பைக்குகளை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 7 பைக்குகளை மீட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...