கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 26th July 2021 08:38 AM | Last Updated : 26th July 2021 08:38 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.
குடியாத்தம் கனவு அறக்கட்டளை, சத்யசாயி சேவா சமிதி அமைப்பு சாா்பில், விநாயகபுரத்தில் நடைபெற்ற இலவச கரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பலா் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனா்.
கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அருண், எஸ்தா், கோகுல் ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியது.
முகாமுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவா்கள் பரமாத்மா, தேவமுகுந்தன், நிா்வாகிகள் ஸ்வேதா, ஐயப்பன், சுருதி, சத்யசாயி சேவா சமிதி நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.