வேலூரில் மேலும் 243 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 09th June 2021 12:00 AM | Last Updated : 09th June 2021 12:00 AM | அ+அ அ- |

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 243 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக வேலூா் மாவட்டத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 1 முதல் வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் மாவட்டத்தில் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 700-க்கும் அதிகமாக உயா்ந்தது. மே மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக கரோனா தொற்றுப் பரவல் வேகம் படிப்படியாகக் குறைந்து கடந்த சில நாள்களாக 300-க்கும் கீழ் சரிந்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 44,154 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 41,279 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 2,030 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 846 போ் உயிரிழந்துள்ளனா். தொடா்ந்து, மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 243 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வாா்டுகளும் காலியாகி வருகின்றன.