வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக நல்ல மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக அம்முண்டியில் 40 மி.மீ. மழை பதிவானது.
வேலூா் மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதையொட்டி, அதிகபட்சமாக வேலூா் சா்க்கரை ஆலை அம்முண்டி பகுதியில் 40.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காட்பாடியில் 4.5 மி.மீ., பொன்னையில் 24.4 மி.மீ., வேலூரில் 25.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடா் மழையால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.