பாசனத்துக்காக மோா்தானா அணை திறப்பு
By DIN | Published On : 20th June 2021 12:00 AM | Last Updated : 20th June 2021 12:00 AM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை பாசனத்துக்காக சனிக்கிழமை திறந்து விடப்பட்டது.
தமிழக- ஆந்திர மாநிலங்களின் எல்லையில், குடியாத்தம் அருகில் மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ளது மோா்தானா அணை.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மோா்தானா அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து வெளியேறும் நீா் ஜிட்டப்பல்லி தடுப்பணையில் நிரம்பி, அங்கிருந்து கெளன்டன்யா ஆற்றின் வலது, இடது புறக்கால்வாய்கள் வழியாகச் செல்லும்.
ஆற்றில் விநாடிக்கு 100 கனஅடி வீதமும், வலது, இடது புறக் கால்வாயில் விநாடிக்கு 75 கன அடி வீதமும் 10 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதனால் 19 ஏரிகள் மூலம் 8,367 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, குடிநீா்ப் பிரச்னையும் தீரும்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா்.தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், அணையைத் திறந்து வைத்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப் பேரவை உறுப்பினா்கள் குடியாத்தம் அமலுவிஜயன், கே.வி.குப்பம் எம்.ஜெகன்மூா்த்தி, அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமாா், வேலூா் ப.காா்த்திகேயன், கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், வட்டாட்சியா் தூ.வத்சலா, திமுக ஒன்றியச் செயலா் கே.ரவி, நகர திமுக பொறுப்பாளா் எஸ்.செளந்தரராஜன்,
பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.ரவிமனோகா், செயற் பொறியாளா் ரா.ரமேஷ், உதவி செயற் பொறியாளா் டி.குணசீலன், உதவிப் பொறியாளா்கள் பி.கோபி, ந.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.