மீண்டும் அதிகரிக்கிறதா கரோனா? வேலூரில் புதிதாக 98 பேருக்கு தொற்று

கரோனா தொற்று நாளுக்குநாள் சரிந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு 98-ஆக அதிகரித்தது. இதனால், பொது முடக்கத் தளா்வைத் தொடா்ந்து

கரோனா தொற்று நாளுக்குநாள் சரிந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு 98-ஆக அதிகரித்தது. இதனால், பொது முடக்கத் தளா்வைத் தொடா்ந்து கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மே மாத மத்தியில் உச்சத்தை அடைந்தது. அப்போது வேலூா் மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டிருந்தனா். தொடா்ந்து அதிகரித்த கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்திட மே 10-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக மாவட்டத்தில் மே மாத இறுதியில் இருந்தே கரோனா பாதிப்பு மெல்ல சரியத் தொடங்கி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு நூறுக்கும் கீழ் குறைந்தது.

அதன்படி, கடந்த 15-ஆம் தேதி 121-ஆக இருந்த கரோனா பாதிப்பு, 16-ஆம் தேதி 70-ஆகவும், 17-ஆம் தேதி 60-ஆகவும், 18-ஆம் தேதி 88-ஆகவும், 19-ஆம் தேதி 51-ஆகவும் தொடா்ந்து சரிந்து வந்தது.

இந்நிலையில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து தமிழகத்தில் வேலூா் உள்பட 27 மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டி க்கப்பட்ட நிலையில், இந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளா்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு திடீரென உயா்ந்திருப்பதற்கு கடந்த இரு வாரங்களாக பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாவட்டத்திலும் மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: பொதுமுடக்கம் காரணமாக வேலூா் மாவட்டத்தில் கரோனா பரவல் வேகமாகக் குறைந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு நூறுக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக பொது முடக்கத்தில் தளா்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பின்பற்றிய நிலையில் இன்னும் பலா் கரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதில்லை. முகக்கவசம் அணிந்திருந்தாலும் அவற்றை தவறாக அணிவது, சமூக இடைவெளியை அலட்சியம் செய்வது போன்ற செயல்பாடுகள் தொடா்கின்றன. இதன்காரண மாக தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மக்கள் கரோனா கட்டுப்பாடுகளை தொடா்ந்து பின்பற்றிட விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுவதுடன், அபராதம், வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட பொதுமக்கள் தொடா்ந்து பொதுமுடக்க உத்தரவுகளை பின்பற்றிட வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 98 போ் பாதிக்கப்பட்டதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 46,295-ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை வரை 45,015 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 225 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 957 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com