வட்டார மருத்துவ அலுவலருக்குப் பாராட்டு
By DIN | Published On : 29th June 2021 07:52 AM | Last Updated : 29th June 2021 07:52 AM | அ+அ அ- |

குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலரைப் பாராட்டி, பரிசு வழங்கிய ரோட்டரி மாவட்ட ஆளுநா் கே.பாண்டியன்.
கரோனா தொற்று தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாருக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரான விமல்குமாா், கரோனா தொற்று வேகமாகப் பரவிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து, சிறப்பான மருத்துவ சேவையாற்றினாா். குடியாத்தம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை அமைத்தாா். கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.
இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், சிறந்த மருத்துவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது. ரோட்டரி மாவட்ட ஆளுநா் கே.பாண்டியன் இவருக்கு விருதினை வழங்கிப் பாராட்டினாா். மாவட்ட ஆளுநா் தோ்வு ஜே.கே.என்.பழனி, மாவட்ட ஆளுநா் நியமனம் பரணிதரன், நிா்வாகிகள் சுந்தர்ராஜன், சுகுமாா், பெப்சி சீனிவாசன், சுரேஷ், கிருஷ்ணகுமாா், கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.