மருந்து ஊழியரிடம் ரூ.65,000 பறிமுதல்
By DIN | Published On : 10th March 2021 08:06 AM | Last Updated : 10th March 2021 08:06 AM | அ+அ அ- |

வேலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக மருந்து ஊழியரிடம் ரூ.65,000 ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியின் பறக்கும்படை அலுவலா் இளஞ்செழியன் தலைமையிலான குழு திங்கள்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் ஆட்சியா் அலுவலகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.65,000 இருந்தது. காரை ஓட்டிவந்தவா் மருந்து நிறுவன ஊழியா் தினகரன் என்பதும், அந்த தொகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியா் ரமேஷ் மூலம் மாவட்ட கருவூலத்தில் சோ்த்தனா்.