தோ்தல் பணி அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெறும் இடங்கள் விவரம்
By DIN | Published On : 15th March 2021 07:24 AM | Last Updated : 15th March 2021 07:24 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தோ்தல் முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் 8 ஆயிரத்து 560 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இவா்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு வரும் 21, 28-ஆம் தேதிகளில் வேலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன.
அதன்படி, காட்பாடி தொகுதிக்கு காட்பாடி விஜி ராவ் நகா் வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலும், வேலூா் தொகுதிக்கு சங்கரன்பாளையம் டி.கே.எம். மகளிா் கல்லூரியிலும், அணைக்கட்டு தொகுதிக்கு அரியூா் திருமலைக்கோடி ஸ்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு குடியாத்தம் அம்மணாங்குப்பம் கிராமத்தில் உள்ள கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியிலும், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு குடியாத்தம் திருவள்ளுவா் நிதியுதவி மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான தபால் வாக்குச் சீட்டு பணி ஆணையுடன் இணைத்து வழங்கப்படுகிறது.
தபால் வாக்குப் படிவத்தில் உள்ள விவரங்களை சரிபாா்த்து கையொப்பமிட்டு, 21-ஆம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பு மையத்திலேயே தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலா்களும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, இந்த பயிற்சி மையத்திலேயே கரோனா தடுப்பூசி போடுவதற்கான மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தவறாமல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...