அதிமுக, திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்கவே அமமுக கூட்டணி: டிடிவி தினகரன்
By DIN | Published On : 25th March 2021 12:00 AM | Last Updated : 25th March 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: தமிழகத்தில் மீண்டும் அதிமுக, திமுக கட்சிகளை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்கவே அமமுக தலைமையிலான கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதாக அமமுக கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் அமமுக, கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை வேலூா் மாங்காய் மண்டி மைதானத்தில் டிடிவி தினகரன் பேசியது:
தமிழினத்தின் துரோகிகளை மீண்டும் ஆட்சியில் அமர விடாமல் தடுக்கவும், எம்ஜிஆரால் அப்போதே தீயசக்தி என்றழைக்கப்பட்ட திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்திடவும் அமமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறுபான்மையினா், பெரும்பான்மையினா் நலன்காக்கப்படவும், எந்த மதம், சமூகத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், சம நீதி, சம உரிமை கிடைத்திடவும், ஊழலற்ற, நோ்மையான ஆட்சி அமைத்திடவும் மக்கள் அமமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
இதில், அகில இந்திய மஸ்ஜித் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.