மூன்று மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.38 கோடிக்கு மதுவிற்பனை
By DIN | Published On : 02nd May 2021 12:39 AM | Last Updated : 02nd May 2021 12:39 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை, தொழிலாளா் தினத்தையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டதையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் ரூ.10 கோடியே 38 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தவிர, தொழிலாளா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் டாஸ்மாக் மதுபானக் கடைகளும், உரிமம் பெற்ற தனியாா் ஹோட்டல் மதுக்கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் வெள்ளிக்கிழமை அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது. மதுபிரியா்கள் அடுத்த இரு நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.
அதனடிப்படையில், வேலூா் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் மொத்தமுள்ள 116 டாஸ்மாக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.6 கோடியே 36 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், பீா் வகைகள் விற்பனையாகின.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், பீா் வகைகள் விற்பனையானது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ .10 கோடியே 38 லட்சத்திற்கு மது விற்பனையாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...