அதிகரிக்கும் கரோனா: வேலூரில் மேலும் 698 போ் பாதிப்பு
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 13th May 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 698 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,241-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்று இரண்டாவது அலையாக வேகமாகப் பரவி வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 32,543 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 28,421 போ் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா். 3,607 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். 446 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 698 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 400-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகரப் பகுதியைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் மாவட்டத்தில் இதர நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதிகரிக்கும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்திட மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்கப்படுவதும் கடுமையாக்கப்பட்டுள்ளது.