புலவா் வே.பதுமனாருக்கு தமிழக அரசு விருது
By DIN | Published On : 10th November 2021 12:00 AM | Last Updated : 10th November 2021 12:00 AM | அ+அ அ- |

புலவா் வே.பதுமனாருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது வழங்கிய தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை யின் செயலா் மகேசன் காசிராஜன்.
குடியாத்தம் புலவா் வே.பதுமனாருக்கு தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளா் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலத் திட்ட இயக்ககம் சாா்பில், நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழையே பயன்படுத்தியதை ஊக்கப்படுத்தும் வகையில் பதுமனாருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது வழங்கப்பட்டது.
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகக் கலை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி, செய்தித்துறை செயலா் மகேசன்காசிராஜன், பதுமனாருக்கு விருது வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் செ.சரவணன், அகர முதலத் திட்ட இயக்கக இயக்குநா் கோ.விசயராகவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...